சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்

தினமலர்  தினமலர்
சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்

மெக்சிகோ : மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள், விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் டில்லியில் இருந்து மெக்சிகோவில் குடியேறியவர்கள் என கூறப்படுகிறது.


மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக எல்லையில் தடுப்புச் சுவர் ஒன்றையும் அமெரிக்கா எழுப்பி வருகிறது. அத்துடன், மெக்சிகோ அரசு இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மெக்சிகோவிலிருந்து தங்களது நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் வரியை பன்மடங்கு உயர்த்துவோம் எனவும் அமெரிக்கா எச்சரித்தது. இதனால் மெச்சிகோ அரசு, அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியாக, தங்களது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை நாடு கடத்தி வருகிறது.


அந்த வகையில், மெக்சிகோவின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட 311 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அனைவரும் விமானம் மூலம் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தெற்கு மெக்சிகோவில் உள்ள 8 மாவட்டங்களில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை