துபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

தினமலர்  தினமலர்
துபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

துபாய் :போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரண்டன் லோப்பஸ் என்பவர், துபாயில் வசித்து வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், 'எமிரேட்ஸ் என்பிடி' என்ற நிறுவனம் நடத்திய குறும்பட போட்டி ஒன்றில் பங்கேற்றார்.

அதில் வெற்றி பெற்ற இவருக்கு, முதல் பரிசாக ஒரு லட்சம் திர்ஹாம் மற்றும் கனடாவின் நோவா ஸ்கோட்டியா அருகே ஷால்பாயின்ட் தீவும் பரிசாக கிடைத்தது. ஆறு ஏக்கர் பரப்பளவுள்ள இந்த தீவு, ஐந்து கால்பந்து மைதானம் பரப்பளவு கொண்டது.

''சொந்தவீடு கூட இல்லாத எனக்கு ஒரு தீவே பரிசாக கிடைத்துள்ளது என்பதை நம்பமுடியவில்லை,'' என்று பூரிக்கிறார் லோப்பஸ்.

மூலக்கதை