டுவிட்டர் டிரென்டிங்கில் திமுக

தினமலர்  தினமலர்
டுவிட்டர் டிரென்டிங்கில் திமுக

சென்னை: நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக தி.மு.க.,வினரை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில், '#BanDMK' டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.


இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடந்த வருகிறது. இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில், தி.மு.க.,வினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. அம்பலம் கிராமத்தில், ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுடன், பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமாரை கிராம மக்கள் சிறைபிடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டுவிட்டரில் '#BanDMK' ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

மூலக்கதை