சத்யா நாதெள்ளா ஊதியம் 305 கோடி ரூபாயாக உயர்வு

தினமலர்  தினமலர்
சத்யா நாதெள்ளா ஊதியம் 305 கோடி ரூபாயாக உயர்வு

புதுடில்லி: ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, சத்யா நாதெள்ளா, 2019 நிதியாண்டில், 66 சதவீதம் அளவுக்கு ஊதிய உயர்வு பெற்றுள்ளார்.

அடிப்படை சம்பளம், 7.1 கோடி ரூபாய் அதிகரிப்பு, பங்குகளின் மதிப்பு அதிகரிப்பு ஆகியவை காரணமாக, 2019ம் நிதியாண்டில் நாதெள்ளாவின் வருமானம், 305 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 66 சதவீதம் அதிகமாகும்.மைக்ரோசாப்டின் நிதி ஆண்டு ஜூலை 1ல் துவங்கி, ஜூன் 30ல் முடிவடையும் காலகட்டமாகும். 2014ம் நிதியாண்டில், அதிகபட்ச ஊதியமாக, 599 கோடி ரூபாயை நாதெள்ளா பெற்றுள்ளார்.

இது குறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:நிறுவன ஊழியர்களின் ஊதியம் சராசரி, 2019ம் நிதியாண்டில், 1.2 கோடி ரூபாய். கடந்த நிதியாண்டில், நிறுவன பங்குதாரர்களுக்கு அதிக லாபம் கிடைத்தது. பங்குகளின் மறுகொள்முதல் மற்றும் ஈவுத் தொகை ஆகியவற்றின் மூலம், 2.19 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது.நாதெள்ளாவின் தலைமை, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் முயற்சிகள் நிறுவனத்தின் உயர்வுக்கு காரணமாக அமைந்தன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை