பசுமை வெகுமதி புள்ளிகள் எஸ்.பி.ஐ.,யில் அறிமுகம்

தினமலர்  தினமலர்
பசுமை வெகுமதி புள்ளிகள் எஸ்.பி.ஐ.,யில் அறிமுகம்

சென்னை: மரங்கள் நடுதல், பயோ கழிப்பறை அமைத்தல் போன்ற சமூக சேவைக்காக, ‘கிரீன் ரிவார்டு பாய்ன்ட்ஸ்’ என்ற புதிய திட்டத்தை, எஸ்.பி.ஐ., எனும் பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து, எஸ்.பி.ஐ., வெளியிட்ட செய்திக் குறிப்பு:எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு, ரிவார்டு பாய்ன்ட்ஸ் எனும் வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும். அதன்படி, குறிப்பிட்ட வெகுமதி புள்ளிகள் சேர்ந்ததும், அதற்கான ரூபாய் மதிப்புகள் வழங்கப்பட்டு, அதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.இந்த நிலையில், கிரீன் ரிவார்டு பாய்ன்ட்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ.,யின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவை தளமான, ‘யோனோ’ செயலியில், பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த கிரீன் ரிவார்டு பாய்ன்ட்ஸ் வழங்கப்படும். இதற்கு, பசுமை நிதிக்காக வெகுமதி புள்ளிகளை வழங்குகிறோம் என, வாடிக்கையாளர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

அவ்வாறு கிடைக்கும் நிதியிலிருந்து, மரங்கள் நடுதல், பயோ கழிப்பறை கட்டுதல், குடிநீர் பற்றாக்குறை உள்ள நகரங்களில், மழை நீர் சேகரிப்புடன் கூடிய, குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்தல் உட்பட, பல்வேறு சமூக சேவைகளுக்காக பயன்படுத்த உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை