டி.வி.எஸ்., நிகர லாபம் 15% அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
டி.வி.எஸ்., நிகர லாபம் 15% அதிகரிப்பு

சென்னை: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவில், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், 15 சதவீதம் அதிகரித்து, 256.88 கோடி ரூபாயாகி உள்ளது.

இது குறித்து, டி.வி.எஸ்., நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாவது நிதியாண்டில், 15 சதவீதம் அதிகரித்து, 256.88 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டில், 223.19 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நிறுவனத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனை, 8.42 லட்சமாக உள்ளது. இது, கடந்த ஆண்டில், 10.49 லட்சமாக இருந்தது. இதில், மோட்டார் சைக்கிள் விற்பனை, 3.42 லட்சமாக உள்ளது. இது, கடந்த ஆண்டு, 4.20 லட்சமாக இருந்தது.

இதே போல, ஸ்கூட்டர் விற்பனை, 3.33 லட்சமாக உள்ளது. இது, கடந்த ஆண்டில், 3.88 லட்சமாக இருந்தது. மூன்று சக்கர வாகன விற்பனை, 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 0.43 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி, 6 சதவீதம் உயர்ந்து, 2.11 லட்சமாக உள்ளது. இது, கடந்த ஆண்டில், 1.99 லட்சமாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருவாய், 4,352.7 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டில், 4,994.2 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது.

வரிக்கு முந்தைய லாபம், 310.3 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டில், 306.2 கோடி ரூபாயாக இருந்தது. இதே போல வரிக்கு பிந்தைய லாபம், 255 கோடி ரூபாயாக உள்ளது. இது, 2018ல், 211.3 கோடி ரூபாயாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை