ஆன்ட்ராய்டு போன்களில் கூகுள் அசிஸ்டென்ட் எனும் செயலியால் செல்போன் சார்ஜ் விரைவில் குறைகிறது: வாடிக்கையாளர்கள் புகார்

தினகரன்  தினகரன்
ஆன்ட்ராய்டு போன்களில் கூகுள் அசிஸ்டென்ட் எனும் செயலியால் செல்போன் சார்ஜ் விரைவில் குறைகிறது: வாடிக்கையாளர்கள் புகார்

வாஷிங்க்டன்: ஆன்ட்ராய்டு செல்போன்களில் உள்ள கூகுள் அசிஸ்டென்ட் எனும் செயலியால் செல்போன் சார்ஜ் விரைவில் குறைந்து விடுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கூகுள் பிக்சல் செல்போன்கள் மற்றும் கூகுள் ஹோம் கருவிகளில், பயனாளிகளுக்கு உதவியாக கூகுள் அசிஸ்டென்ட் என்ற செயலி இடம்பெற்றுள்ளன. சக மனிதரைப் போலவே நம்முடன் உரையாடும் திறன் இதற்கு இருக்கிறது. மனிதர்கள் பேசிக்கொள்ளும்போது பயன்படுத்தும் நுணுக்கங்களையும்கூட இது பயன்படுத்துகிறது.\'Ok, Google\' அல்லது \'Hey, Google\'’ உள்ளிட்ட சொற்றொடர்களை கூறி கூகுள் அசிஸ்டென்ட் செயலியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது, அது, தானாக அருகிலுள்ள செல்போனின் கூகுள் அசிஸ்டென்ட் செயலியை ஆக்டிவேட் செய்கின்றன. இதனால் அருகில் இருக்கும் வாடிக்கையாளரின் செல்போன் திரை விழித்தபடி இருந்து, பேட்டரி சார்ஜை குறைய செய்கிறது. கூகுள் அசிஸ்டென்ட் செயலியால் அருகிலுள்ள செல்போனும் அன்லாக் செய்வதோடு, அந்த செல்போனின் பாதுகாப்பு என்பதும் கேள்வி குறியாகியுள்ளது. இந்த புகார்களை பதிவு செய்து வரும் வாடிக்கையாளர்கள், கூகுள் இதற்கு தீர்வு காண வேண்டும் என கூறுகின்றனர்.

மூலக்கதை