சூதாட்ட புகாரில் சிக்கிய எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் நீக்கம்: ஐசிசி

தினகரன்  தினகரன்
சூதாட்ட புகாரில் சிக்கிய எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் நீக்கம்: ஐசிசி

துபாய்: ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றுப் போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை தொடங்குகிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் டி20 தகுதிச்சுற்று மற்றும் நவம்பர் மாதம் அபுதாபியில் நடைபெற உள்ள டி10 தொடரில் பங்கேற்க உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கி உள்ளது. அணியின் கேப்டன் முகமது நவீத், ஷாய்மன் அன்வர், கதீர் அகமது ஆகியோர் ஐசிசி விதிமுறைகளை மீறி சூதாட்டாத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.உள்ளூர் வீரர் மெஹர்தீப் ஜாயகருடன் (Mehardeep Chhayakar) சேர்ந்து இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் அணி, சூதாட்ட புகாரில் சிக்குவது இது முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்த ஐக்கிய அரபு எமிரெட்ஸ் கேப்டன் உட்பட 3 வீரர்களையும் ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது. 32 வயதாகும் கேப்டன் நவீத் வேகப்பந்து வீச்சாளர் 39 ஒரு நாள் போட்டிகளிலும் 31 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். நவீத், சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து அந்த அணியின் புதிய கேப்டனாக, சுழற் பந்துவீச்சாளர் அகமது ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை