கோயம்பேடு மேம்பாலப்பணி முடக்கத்தால் வாகன நெரிசல்: விபத்து அபாயம் அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோயம்பேடு மேம்பாலப்பணி முடக்கத்தால் வாகன நெரிசல்: விபத்து அபாயம் அதிகரிப்பு

அண்ணாநகர்: கோயம்பேட்டில் நீண்ட காலமாக மேம்பால கட்டுமான பணிகளின் முடக்கத்தால், அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது.

இப்பணிகளை விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை கோயம்பேட்டில் கடந்த 2015-ம் ஆண்டு, ₹93. 5 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் துவங்கியது.

இப்பாலப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக மிக மந்த கதியில் நடைபெற்று, தற்போது அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. இதனால் அவ்வழியே அண்ணாநகர், திருமங்கலம், பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் அங்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர்.

மேலும், இவ்வழியே குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அலுவலக பணிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, இந்த மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும், அங்கு காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடவும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை