துபாயில் மேல்படிப்பு படித்த ஐரோப்பிய மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி தலைமறைவு: சென்னை இளம் தொழிலதிபர் தந்தையுடன் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
துபாயில் மேல்படிப்பு படித்த ஐரோப்பிய மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி தலைமறைவு: சென்னை இளம் தொழிலதிபர் தந்தையுடன் கைது

சென்னை: துபாயில் மேல்படிப்பு படித்து வந்த ஐரோப்பிய மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றி தலைமறைவான வழக்கில் இளம் தொழிலதிபரை அவரது தந்தையுடன் போலீசார் கைது செய்தனர். சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவை ேசர்ந்தவர் அப்துல் கரீம்.

தொழிலதிபரான இவருக்கு ருமைஸ் அகமது(28) என்ற மகன் உள்ளார். இளம் தொழிதிபரான ருமைஸ் அகமது, பெரிய அளவில் இறால் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் தொழில் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது,  ஐரோப்பா லிபிவேனியா நாட்டை சேர்ந்த மாணவி உக்னே பெரேவேரி செவைத்(22) என்பவர் துபாய் நாட்டில் மேல்படிப்பு படித்து வந்தார்.

அப்போது அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தற்செயலாக உக்னே பெரேவேரி செவைத்தை இளம் தொழிலதிபர் ருமேஸ் அகமது சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பிறகு நட்பாக மாறியுள்ளது.

பின்னர் நாளடைவில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இதனால் இருவரும் பல முறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையே உக்னே பெரேவேரி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

அதன் பிறகு சில மாதம் இலங்கை கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்து இருந்தார். அதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு தனது காதலியை ருமேஸ் அகமது அழைத்து வந்துள்ளார்.

பிறகு ருமேஸ் அகமது அமைந்தகரையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து செல்லாமல், எழும்பூரில் ஒரு ஓட்டலில் தங்க வைத்திருந்தார். இதற்கிடையே கர்ப்பமாக இருந்த உக்னே ெபரேவேரி செவைத்தை ருமேஸ் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் கருவை கலைத்தால் தான் திருமணம் செய்து வைக்க முடியும் என்று கூறி கட்டாயப்படுத்தி கடந்த ஜூன் 21ம் தேதி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

இதற்கிடையே மீண்டும் உக்னே பெரேவேரி செவைத்துடன் ருமேஸ் அகமது தனிமையில் இருந்துள்ளார். இதனால் மீண்டும் அவர் இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்ய கோரி ருமேஸ் அகமதுவை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் ருமேஸ் அகமது தனது இன்பத்திற்கு மட்டும் ஐரோப்பிய மாணவியை பயன்படுத்திவிட்டு திருமணம் ெசய்ய முடியாது என்று கூறி திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஐரோப்பிய நாட்டை சேர்ந்த உக்னே பெரேவேரி செவைத் தனது காதலனை பல முறை தொடர்பு கொண்டும் முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் சென்ைனயில் எந்த அதரவும் இன்றியும் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமலும் தவித்துள்ளார். பிறகு வேறு வழியின்றி ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காதலித்து கர்ப்பமாக்கி தலைமறைவான காதலன் மீதும், கட்டாயப்படுத்தி கர்ப்பத்தை கலைத்த காதலன் தந்தை அப்துல் கரீம் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார்.

அதன்படி போலீசார்,  காதலித்து கர்ப்பமாக்கிய ருமேஸ் அகமது மற்றும் அவரது தந்தை அப்துல் கரீம் மீது ஐபிசி 417, 313,506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் ேநற்று நள்ளிரவு அமைந்தகரையில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த போது காதலன் ருமேஸ் அகமது மற்றும் அவரது தந்தை அப்துல் கரீமை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


.

மூலக்கதை