சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

தினகரன்  தினகரன்
சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

ரியாத்: சவூதி அரேபியாவின் மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர். சவூதி அரேபியாவின் மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் பேருந்து ஒன்று சென்று  கொண்டிருந்தது. அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த  4 பேர் அல் ஹம்மா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்  மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை