சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

தினமலர்  தினமலர்
சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

ரியாத்: சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்

மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை