கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் கல்கி ஆசிரமத்தின் பேரில் சொத்து வாங்கி குவிப்பு: மேலும் ரியல் எஸ்டேட் தொழில் கண்டு பிடிப்பு

தினகரன்  தினகரன்
கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் கல்கி ஆசிரமத்தின் பேரில் சொத்து வாங்கி குவிப்பு: மேலும் ரியல் எஸ்டேட் தொழில் கண்டு பிடிப்பு

சென்னை: கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் கல்கி ஆசிரமத்தின் பேரில் சொத்து வாங்கி குவிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் சொத்து வாங்கியதற்கான ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்கி ஆசிரமத்துக்கு பக்தர்கள் கொடுத்த நன்கொடையில் ரியல் எஸ்டேட் தொழில் நடந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கல்கி என்ற விஜயகுமாரின் மகன் கிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழிலை கவனித்து வந்திருக்கிறார். சென்னை அருகே ஆந்திராவில் உள்ள தடா மற்றும் வேலூரில் 1000 ஏக்கர் நிலம் கல்கி வாங்கியுள்ளார்.

மூலக்கதை