வெள்ளை குதிரையில் வட கொரிய அதிபர் அதிரடி திட்டத்துக்கு முன்னோட்டம்

தினமலர்  தினமலர்
வெள்ளை குதிரையில் வட கொரிய அதிபர் அதிரடி திட்டத்துக்கு முன்னோட்டம்

சியோல், :கிழக்கு ஆசிய நாடான, வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங்க் உன், வெள்ளை குதிரையில், அந்த நாட்டில் புனிதமாக கருதப்படும், பேக்து மலைப் பகுதியில் பயணம் செய்துள்ளார். இதன் மூலம், அடுத்ததாக மிகப் பெரிய அதிரடி நடவடிக்கையை அவர் எடுக்க உள்ளதாக, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளில், வட கொரியா தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. பல்வேறு தடைகள்அதையடுத்து, அந்த நாட்டின் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. கடந்த, 2006ம் ஆண்டில் இருந்து, 11 முறை, பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன.
இதற்கிடையே, அணு ஒப்பந்தம் செய்வதற்காக, வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு நடத்தினர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது.இந்த நிலையில், அந்த நாட்டில் மிகவும் புனிதமாக கருதப்படும், பேக்து மலையில், பனி சூழ்ந்த மரங்கள் இடையே, வெள்ளை குதிரையில், அதிபர் கிம் ஜாங்க் உன், பயணம் செய்யும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.எதிர்பார்ப்புஇதற்கு முன், அதிபரும், அவரது குடும்பத்தாரும், பல முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும், முக்கிய நிகழ்வுகளின்போதும், இந்த மலையில் குதிரையில் பயணம் செய்துள்ளனர்.

அதனால், அடுத்த சில நாட்களில், கிம் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கலாம் அல்லது அறிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, கிம் ஜாங்க் உன் கூறியதாக வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:அமெரிக்காவின் பொருளாதார தடையால், நாடு பல கஷ்டங்களை, துயர்களை சந்திக்க நேர்ந்து உள்ளது. இதற்கு, விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதனால், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் இருக்குமா என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை