எஸ்.பி.ஐ., லைப் நிகர லாபம் சரிவு

தினமலர்  தினமலர்
எஸ்.பி.ஐ., லைப் நிகர லாபம் சரிவு

சென்னை: எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 48 சதவீதம் சரிவு கண்டு, 129.84 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 250.53 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், புதிய வணிக பிரீமியம், 7,817 கோடி ரூபாய் பெற்று, 40 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, 5,573 கோடி ரூபாயாக இருந்தது. மேலும், எஸ்.பி.ஐ., ஆயுள் பாதுகாப்பு பிரிவில், புதிய வணிக பிரீமியம், 929 கோடி ரூபாய் வசூலாகி, 59 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டில், 586 கோடி ரூபாயாக இருந்தது.

தனிநபர் இன்சூரன்ஸ் பிரிவில், 30 சதவீதம் அதிகரித்து, 4,848 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது, கடந்த ஆண்டில், 3,719 கோடி ரூபாயாக இருந்தது. மேலும், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 23 சதவீதம் உயர்ந்து, 1.55 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டில், 1.26 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை