நான்கு பேரை கொன்றதாக இந்தியர் ஒப்புதல்

தினமலர்  தினமலர்
நான்கு பேரை கொன்றதாக இந்தியர் ஒப்புதல்

சான்பிரான்சிஸ்கோ : அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கம்ப்யூட்டர் நிபுணர், சங்கர் நாகப்பா ஹன்கட் என்பவர், காரில் சென்றுள்ளார். தன் காரில், ஒருவருடைய உடல் உள்ளதாகவும், இதைத் தவிர தன் வீட்டில் மேலும் மூவருடைய உடல் உள்ளதாகவும், அனைவரையும் தான் கொன்றதாகவும், போலீசில் அவர் கூறியுள்ளார். இந்த நால்வரும், அவருடைய உறவினர்கள். ஆனால், எதற்காக கொலை செய்தார் என்பது குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.

மூலக்கதை