பாயுமா? விதிமீறல் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை...உரிமம் பெறாத நபர்கள் விற்பது அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
பாயுமா? விதிமீறல் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை...உரிமம் பெறாத நபர்கள் விற்பது அதிகரிப்பு

விதிமுறை மீறும் பட்டாசு கடைகளின் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், சீன பட்டாசுகள் ஊடுருவலை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீதிகள் தோறும், பட்டாசு கடைகள் புற்றீசல்போல் முளைப்பது வழக்கம். பட்டாசு வெடிக்கும்போது சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அவற்றை வெடிக்கும் முறைகள் குறித்து அந்தந்த தீயணைப்பு நிலையம் சார்பில் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.பட்டாசு கடைகளுக்கு வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். அந்தந்த துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அனுமதி வழங்கினால் மட்டுமே தொடர முடியும். இதற்காக பட்டாசு கடைகளுக்கும், தொழிற்கூடங்களுக்கும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அதில், பட்டாசு கடைகளில் அசம்பாவிதம் ஏற்படும்போது எளிதில் வெளியே செல்லும் வகையில் இருபுற வழிகள் கட்டாயம் இருக்க வேண்டும். மணல் மூட்டைகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் தீயணைப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும். அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. பழுதான பழைய மின் ஒயர்களை அகற்றி, புதிதாக பொருத்தியிருக்க வேண்டும்.உரிமம் பெறாமல் பட்டாசுகளை சேமித்து வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் வெடிமருந்துச் சட்டம் 1884ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற விதிமுறைகள் இருந்தாலும், சிவகாசியில் இருந்து உரிமம் பெறாத நபர்கள் பட்டாசுகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். கடைகளுக்கு அனுமதி இல்லாததால், குறிப்பிட்ட இடங்களில் பட்டாசுகளை சேமித்து வைத்துக் கொண்டு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற பெயரிலும், தள்ளுவண்டிகளிலும் விற்பனை செய்கின்றனர்.
ஆபத்து மிகுந்த பட்டாசு வகைகளை பாதுகாப்பின்றி நெரிசல் மிகுந்த பகுதிகளில் விற்பனை செய்வதால், பொது மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்பவர்கள், விதிமுறை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பட்டாசுகள் 'கிப்ட்'மாவட்டம் முழுவதும் பிரபல நிறுவனங்களில், விற்பனையை அதிகரிக்கும் வகையில் பட்டாசுகள் 'கிப்ட்' என்ற பெயரில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பட்டாசு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித பாதுகாப்புமின்றி பட்டாசுகளை கிப்ட் பாக்ஸ் என்ற பெயரில் இலவசமாக வழங்குவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.நாட்டுவெடிகள் விற்பனை ஜோர்தீபாவளியின்போது, நாட்டு வெடிகள் விற்பனை அதிகரித்து விடும். அதிக சப்தம் வரும் இவ்வகை வெடிகளில், வழக்கத்திற்கு அதிகமாக மருந்துகள் கலப்பதால், இவ்வகை வெடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கள்ளச்சந்தையில் நாட்டு வெடிகள் விற்பனை அதிகமாக இருக்கும்.சீன பட்டாசுகள் தடுக்கப்படுமா?சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், சராசரி மனிதனின் கேட்கும் திறனுக்கு தகுந்தது. சீன பட்டாசுகளில் 125 டெசிபலுக்கு கூடுதலாக சப்தம் கேட்கும். அதில், எளிதில் தீப்பற்றும் பொட்டாசியம் குளோரைடு அதிகம் சேர்க்கப்படுகிறது.இது அதிக சப்தம், கூடுதல் வர்ணங்களை வெளிப்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால், சீன பட்டாசுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே, இந்த தீபாவளி பண்டிகைக்கு சீன பட்டாசுகள் விற்பனையை கண்காணித்து, தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நமது நிருபர் -

மூலக்கதை