கோகோய் வெளிநாடு பயணம் ரத்து

தினமலர்  தினமலர்
கோகோய் வெளிநாடு பயணம் ரத்து

புதுடில்லி: அயோத்தி வழக்கின் விசாரணை, நேற்று மாலை, 4:00 மணியுடன் நிறைவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட, 14 மேல்முறையீட்டு மனுக்களும், விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பர், 17ல் பணி ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் ரஞ்சன் கோகோய், தனது சொந்த காரணங்களாக தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதனை ரத்து செய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஒய்வு பெறும் நாளன்று (நவ.17) அல்லது அதற்கு ஒரிரு நாட்களுக்கு முன்பாக இறுதி தீர்ப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மூலக்கதை