வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -

தினமலர்  தினமலர்
வறுமை என்னும் நோயை தீர்க்கவா... இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்

'உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அவரது மனித உரிமை மீறப்படுகிறது' என்கிறார் பிரான்சை சேர்ந்த பாதிரியார் ஜோசப் ரெசின்கி. சிறு வயதிலேயே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது.

இதனை ஐ.நா., சபை அங்கீகரித்தது. 'குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தை முன்னேற்றி வறுமையை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 2030ம் ஆண்டுக்குள் அனைத்து நிலைகளிலும் வறுமைக்கு தீர்வு காண ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது.

எது வறுமை



அனைவருக்கும் உணவு, குடிநீர், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், உடை,
இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாதவர்கள் வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுகின்றனர்.வறுமை, வன்முறைக்கு வழிவகுக்கிறது. உலகில் அதிக மரணங்கள்
வறுமையினால் தான் ஏற்படுகிறது. எய்ட்ஸ், மலேரியா, டிபி., போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களை விட, வறுமை யினால் உயிரிழப்பவர்கள் அதிகம்.

காரணம் என்ன



வறுமை தொடர்வதற்கு ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை,
விலைவாசி உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளன. அனைவருக்கும் கல்வி கிடைத்தால்

ஓரளவுக்கு வறுமை குறையும்.

17.2



உலகில் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில், 17.2 சதவீதம் வறுமையில் உள்ளனர். இது நகரங்களை விட மூன்று மடங்கு அதிகம்.

55



உலகில் 2018 கணக்கின் படி சமூக பாதுகாப்பு இல்லாமல், 55 சதவீத மக்கள் உள்ளனர்.

100



உலகில் 25 - 34 வயதுக்குட்பட்டவர்களில், 100 ஆண்களுக்கு, 122 பெண்கள் வறுமை நிலையில் உள்ளனர்.

73



உலகில் 73 கோடி பேர், உணவின்றி வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 41 கோடி பேர் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு நாளைக்கு ரூ.135க்கு கீழ் வருமானம் உடையவகள்.

41



உலகில் 2018 கணக்கின் படி, 41 சதவீத பெண்கள் மட்டுமே, குழந்தை பேறுகால நிதியுதவி
பெறுகின்றனர்.

5



உலகில் ஐந்தில் ஒரு சிறுவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8



உலகில் 2018 கணக்கின்படி வேலைக்கு செல்பவர்களில், 8 சதவீதம் பேர் வறுமையில்
வாழ்கின்றனர்.

மூலக்கதை