கன்னியாஸ்திரி மேல்முறையீடு வாட்டிகன் நிராகரிப்பு

தினமலர்  தினமலர்
கன்னியாஸ்திரி மேல்முறையீடு வாட்டிகன் நிராகரிப்பு

கொச்சி: கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்தகத்தோலிக்க திருச்சபையில் இருந்து, கன்னியாஸ்திரி லுாசி களப்புரா நீக்கப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, கத்தோலிக்க திருச்சபையான, வாட்டிகன் நிராகரித்தது.கேரளாவைச் சேர்ந்த, முன்னாள் கத்தோலிக்க பிஷப், பிரான்சிஸ் முல்லக்கல் என்பவர், கன்னியாஸ்திரி ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, பிஷப் பிரான்சிஸ் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


முன்னதாக, பிரான்சிசை கைது செய்யக் கோரி, கன்னியாஸ்திரிகள் பலர் போராட்டத்தில்ஈடுபட்டனர்.உத்தரவுஇதில், கன்னியாஸ்திரி, லுாரி களப்புரா, 53,என்பவரும் பங்கேற்றார்.இதன் காரணமாக, கேரள கத்தோலிக்க திருச்சபை சார்பில், அவர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தேவாலயப் பணிகளில் ஈடுபடக் கூடாது என,உத்தரவிட்டது.இந்நிலையில், கேரள அரசு நடத்திய, 'பெண்கள் சுவர்' போராட்டத்துக்கு ஆதரவாக, கன்னியாஸ்திரி லுாசி, கருத்து தெரிவித்தார்.இது, மதக்கோட்பாட்டுக்கு எதிரானது என குற்றம் சாட்டி, கன்னியாஸ்திரியிடம் விளக்கம் கேட்டு, திருச்சபை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.

இதற்கு, லுாசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அது திருப்திகரமாக இல்லை என கூறி, திருச்சபையில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.இதற்கு எதிராக, ஐரோப்பிய நாடான வாட்டிகனில் உள்ள, கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில், லுாசி மேல்முறையீடு செய்தார்.வாய்ப்புஇந்த மேல்முறையீட்டை, வாட்டிகன் திருச்சபை, நேற்று நிராகரித்தது.இதன் மீது, மீண்டும் ஒருமுறை மேல்முறையீடு செய்ய, லுாசிக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,அதுவும் நிராகரிக்கப்பட்டால், அவர் திருச்சபையை விட்டு வெளியேறுவதை தவிர வேறுவழி இல்லை என்றும் கூறப்படுகிறது.

மூலக்கதை