2 ஆண்டில் இல்லாத அளவு எரிபொருள் தேவை குறைந்தது

தினகரன்  தினகரன்
2 ஆண்டில் இல்லாத அளவு எரிபொருள் தேவை குறைந்தது

புதுடெல்லி: நாட்டின் எரிபொருள் தேவை கடந்த 2 ஆண்டில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் 16.01 மில்லியன் டன்களாக சரிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது 16.06 மில்லியன் டன்களாக இருந்தது. கடந்த 2017 ஜூலை மாதத்துக்கு பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு எரிபொருள் தேவை குறைந்துள்ளது. வாகன விற்பனை மந்த நிலை இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதிகம் பயன்படுத்தப்படும் டீசல் பயன்பாடு 3.2 சதவீதம் சரிந்து 5.8 மில்லியன் டன்களாக உள்ளது. டீசல், பெட்ரோல் இடையே விலை வித்தியாசம் குறைந்ததால் டீசல் வாகன விற்பனை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுபோல் நாப்தா விற்பனை 8.44 லட்சம் டன்களாகவும், சாலைகள் போட பயன்படுத்தப்படும் பிட்டுமன் 7.3 சதவீதம் சரிந்து 3.43 லட்சம் டன்களாகவும் குறைந்துள்ளது. அதேநேரத்தில் சமையல் காஸ் ேதவை அதிகரித்துள்ளது. இதுபோல், பெட்ரோல் பயன்பாடு 6.2 சதவீதம் உயர்ந்து 2.37 மில்லியன் டன்களாகவும், விமான எரிபொருள் ேதவை 1.6 சதவீதம் சரிந்து 6.66 லட்சம் டன்களாகவும் உள்ளது என மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டம் மற்றும் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

மூலக்கதை