மாணவியை தாக்கிய நபரிடம் விசாரணை

தினகரன்  தினகரன்
மாணவியை தாக்கிய நபரிடம் விசாரணை

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் கற்பகம் அவென்யூவை சேர்ந்தவர் ராணி (13), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ராயப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ராணியுடன் படிக்கும் மாணவி ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, ேநற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து ராணி வெளியே வரும் போது மாணவியின் தந்தை ராணியிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதுகுறித்து மாணவி ராயப்பேட்டை காவல் நிலையத்தில்,  அளித்த புகாரின்பேரில் மாணவியின் தந்தை ராணியை அடித்த நபரிடம் விசாரிக் கின்றனர்.

மூலக்கதை