போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிசிசிஐ நிர்வாகிகள் 23ல் பதவிேயற்பு: பதவிக்காக ரூ7 கோடி வருவாயை இழந்த கங்குலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிசிசிஐ நிர்வாகிகள் 23ல் பதவிேயற்பு: பதவிக்காக ரூ7 கோடி வருவாயை இழந்த கங்குலி

மும்பை:  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐயின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார். சவுரவ்  கங்குலி இந்த பதவியில் அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் வரை நீடிப்பார்.

தற்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக  உள்ள கங்குலி, கிரிக்கெட் போட்டி வர்ணனையாளர், ஐபிஎல் தொடரில் டெல்லி கிரிக்கெட் அணியின் ஆலோசகர்,  தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நிபுணர் என பல பரிமாணங்களில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பிசிசிஐ தலைவராக அவர் பதவியேற்கும் பட்சத்தில், மேற்கண்ட அனைத்து வேலைகளிலிருந்தும் விலக  வேண்டும்.

இதன் மூலம் கிடைத்த சுமார் 7 கோடி ரூபாய் வருமானத்தை அவர் இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. மேலும், பிசிசிஐ  தலைவராக தேர்வாகும்பட்சத்தில், எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக அவரை தேர்வு செய்ய முடியாது என்பது  குறிப்பிடத்தக்கது.



மேலும், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட்  சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள்  தலைவரும், மத்திய அமைச்சருமான  அனுராக் தாகூரின் சகோதரரும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண்சிங் துமாலும்,  இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜூம் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கர்நாடகாவை சேர்ந்த பிரிஜேஷ் பட்டேல், ஐபிஎல் சேர்மனாக  போட்டியின்றி தேர்வானார்.

புதிதாக தேர்ந்து எடுக்கபட்ட நிர்வாகிகள் வரும் 23ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

அதனால்,  அன்றைய தினம் நிர்வாகிகள் தேர்வுக்கு தேர்தல் ஏதும் நடக்காது என்பதே தெரியவந்துள்ளது.

.

மூலக்கதை