மன்மோகன் ஆட்சியில் வங்கித்துறை மோசம் : நிர்மலா சீதாராமன்

தினமலர்  தினமலர்
மன்மோகன் ஆட்சியில் வங்கித்துறை மோசம் : நிர்மலா சீதாராமன்

நியூயார்க் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் காலத்தில் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மிகவும் மோசமடைந்திருந்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலை.,யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், ரகுராம் ராஜன் மிகச் சிறந்த திறமைசாலி. அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவர் ஆர்பிஐ கவர்னராக இருந்த போது இந்திய பொருளாதாரம் அனைத்து வகைகளிலும் சிறப்பாக உள்ளது என்ற மிதப்பில் இருந்தார். தனக்கு வேண்டிய தலைவர்கள் போனில் அழைத்து சொல்வதன் அடிப்படையிலேயே அவர் காலத்தில் வங்கி கடன்கள் வழங்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகளை இன்று வரை அதளபாதாளத்தில் இருந்து மீட்பதே அரசின் மிகப் பெரிய முயற்சியாக இருந்து வருகிறது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, இந்தியா பற்றிய தெளிவான பார்வை இல்லாத மன்மோகனின் வார்த்தையை மட்டுமே ரகுராம் ராஜன் ஆமோதித்து கொண்டிருந்தார். நான் யாரையும் கிண்டல் செய்ய விரும்பவில்லை. மன்மோகன் - ரகுராம் ராஜன் காலத்தில் இருந்ததை போன்று அதற்கு முன் பொதுத்துறை வங்கிகள் இந்த அளவிற்கு மோசமாக இருந்தது இல்லை. இதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்றார்.

மூலக்கதை