ஆட்டோவில் பயணித்த அரச தம்பதி

தினமலர்  தினமலர்
ஆட்டோவில் பயணித்த அரச தம்பதி

இஸ்லாமாபாத் : பாக்., சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் பாரம்பரிய உடை அணிந்து, அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் பயணித்தது இணையதளவாசிகளை கவர்ந்துள்ளது.


கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த எவரும் பாக்.,கிற்கு சென்றதில்லை. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டன் தூதர் தாமஸ் டுரீவ் அளித்த அழைப்பின் பேரில், இளவரசர் வில்லியமும், அவரது மனைவியும் 5 நாள் பயணமாக பாக்., சென்றுள்ளனர். இந்த தம்பதியின் முதல் பாக்., பயணம் இது.

அக்., 14 அன்று இரவு இஸ்லாமாபாத் சென்ற அரச தம்பதி, அக்.,15 அன்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாரம்பரிய உடை அணிந்து, வித்தியாசமான முறையில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர்.
அரசு தம்பதியின் ஆட்டோ பயணம் தொடர்பான போட்டோக்களையும், வீடியோவையும் கென்சிங்டன் அரண்மனை, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. இதற்கு வரவேற்புரம், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. டுவிட்டரிலும் பாராட்டுக்களும், லைக்களும் குவிந்து வருகின்றன.

மூலக்கதை