கர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு கட்டணம் ?

தினமலர்  தினமலர்
கர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு கட்டணம் ?

லாகூர்,' சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் சாஹிப் பாகிஸ்தானில் சர்வதேச எல்லையை ஒட்டி ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை சீக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர்.
குருநானக்கின் 550வது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இப்புனித இடத்திற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் நகரிலிருந்து சர்வதேச எல்லை வரை சிறப்பு பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

பாகிஸ்தான் எல்லையிலிருந்து கர்தார்பூர் வரை சாலை அமைக்க பாக்.கும் ஒப்பு கொண்டுள்ளது. கர்தார்பூர் சாஹிப்புக்கு சீக்கியர்கள் 'விசா' இல்லாமல் செல்லவும் இரு நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து நவம்பர் 9ல் இந்திய சீக்கியர்களுக்காக கர்தார்பூர் பாதை திறக்கப்படும். தினமும் இந்தியாவிலிருந்து 5000 சீக்கியர்கள் இந்த பாதையில் விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர் என பாக். கூறியது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து வரும் சீக்கியர்களிடம் தலா 20 டாலர் நுழைவு கட்டணமாக வசூலிக்க பாக். அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான வரைவு அறிக்கையையும் ஹைகமிஷன் வாயிலாக இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாக். அனுப்பிய வரைவு திட்ட அறிக்கைக்கு இந்தியா பதில் அளிக்காமல் உள்ளது.


மூலக்கதை