பா.ஜ. முதல்வர் வேட்பாளரா கங்குலி?

தினமலர்  தினமலர்
பா.ஜ. முதல்வர் வேட்பாளரா கங்குலி?

பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு பெற்றார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை , கங்குலி மும்பையில் சந்தித்தார். இதை வைத்து வரும் 2021-ம் ஆண்டு நடக்க உள்ள மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ. சார்பில் முதல்வர் வேட்பாளராக கங்குலி முன்னிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாயின.


இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகையில், விதிகளின் அடிப்படையில் கங்குலி பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு தேர்வு பெற்றுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கங்குலியிடம் நான் பேரம் பேசியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. யாருடைய தயவும் இல்லாமல் லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் 18 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம். கங்குலியிடம் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. அவர் விரும்பினால் பா.ஜ.வில் சேரலாம் என்றார்.


மூலக்கதை