தாவூத் கூட்டாளி இக்பால் மிர்சியுடன் தொடர்பு:பிரபுல் படேலுக்கு'சம்மன்'

தினமலர்  தினமலர்
தாவூத் கூட்டாளி இக்பால் மிர்சியுடன் தொடர்பு:பிரபுல் படேலுக்குசம்மன்

புதுடில்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி தொடர்பான வழக்கில் தேசியவாத காங். மூத்த தலைவர் பிரபுல் படேலுக்கு அமலாக்க துறை 'சம்மன்' அனுப்பியுள்ளது.மும்பை நிழல் உலக தாதாவாக இருந்த தாவூத் இப்ராகிமின் கூட்டாளி இக்பால் மிர்ச்சி மஹாராஷ்டிராவில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார்.

இவருடன் சேர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங். மூத்த தலைவருமான பிரபுல் படேலும் அவரது மனைவியும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக சில ஒப்பந்தங்கள் செய்ததாக புகார் எழுந்தது.


இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பிரபுல் படேலுக்கு அமலாக்க துறை சார்பில் 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் வரும் 18ல் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பிரபுல் படேல் கூறுகையில்'வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்'' என்றார்.


மூலக்கதை