மகுடம் இழந்த மந்தனா! | அக்டோபர் 15, 2019

தினமலர்  தினமலர்
மகுடம் இழந்த மந்தனா! | அக்டோபர் 15, 2019

 துபாய்: பெண்கள் ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதலிடத்தை இழந்தார். இவர், சமீபத்திய தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் 755 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். கேப்டன் மிதாலி ராஜ் 7வது(705 புள்ளி), ஹர்மன்பிரீத் கவுர் 17வது(602) இடம் பெற்றனர். முதலிடத்தை நியூசிலாந்தின் ஏமி சாட்டர்வெயிட்(759) பிடித்தார். 

பவுலர்கள் பட்டியலில் ஜூலான் கோஸ்வாமி(704), ஷிகா பாண்டே(685), பூணம் யாதவ்(659) முறையே 6,8,9வது இடங்களை பிடித்தனர். முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜான்சன்(755) பெற்றார். ‘ஆல்–ரவுண்டர்’ பட்டியலில் தீப்தி சர்மா 3வது(369), ஷிகா பாண்டே(262) 10வது இடம் பெற்றனர். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் எலிசி பெர்ரி(523) உள்ளார்.

மூலக்கதை