தமிழ் சினிமாவில் ஹர்பஜன் சிங் | அக்டோபர் 15, 2019

தினமலர்  தினமலர்
தமிழ் சினிமாவில் ஹர்பஜன் சிங் | அக்டோபர் 15, 2019

புதுடில்லி: இர்பான் பதானை தொடர்ந்து இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கும் சீசன் போல. முன்னாள் வேகப்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ இர்பான் பதான் 36, விக்ரம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த வரிசையில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். 

ஏற்கனவே சென்னை ஐ.பி.எல்., அணியில் விளையாடி வரும் இவர், அவ்வப்போது தமிழில் ‘டுவிட்டர்’ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவார். சினிமா அறிமுகம் குறித்து அவர் தமிழில் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ தல, தளபதி உருவாக்கிய பூமி இது, தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை துாக்கி நிறுத்திய உறவுகளே, உங்களால் வெள்ளித்திரையில்... தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் சந்தானம் குழுவுக்கு நன்றி,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை