மீண்டும் சிம்மன்ஸ் பயிற்சியாளர் | அக்டோபர் 15, 2019

தினமலர்  தினமலர்
மீண்டும் சிம்மன்ஸ் பயிற்சியாளர் | அக்டோபர் 15, 2019

 ஆன்டிகுவா: விண்டீஸ்  அணியின் பயிற்சியாளராக 2015ல் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியில் விண்டீஸ் அணி 2016ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றது. பின் தேர்வாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் தலைமை பயிற்சியாளராக சிம்மன்ஸ், 56, நியமிக்கப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.

இது குறித்து விண்டீஸ் கிரிக்கெட் போர்டு தலைவர் ரிக்கி ஸ்கிரிட் கூறுகையில்,‘‘இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்ட பிளாய்டு ரீபருக்கு நன்றி. தற்போது சரியான நபரை சரியான நேரத்தில் தேர்வு செய்துள்ளோம்,’’என்றார்.

மூலக்கதை