மீண்டும் களமிறங்கும் சச்சின் | அக்டோபர் 15, 2019

தினமலர்  தினமலர்
மீண்டும் களமிறங்கும் சச்சின் | அக்டோபர் 15, 2019

மும்பை: சச்சின், லாரா, சேவக் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘டுவென்டி–20’ தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ளது.

இந்தியாவில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ‘ரோடு சேப்டி உலக சீரிஸ்’ என்ற பெயரில் ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிப். 2 முதல் 16 வரை என இந்தியாவின் பல நகரங்களில் நடக்கும்.

இதில் ஓய்வு பெற்ற வீரர்கள் இந்தியாவின் சச்சின், சேவக், லாரா (விண்டீஸ்), பிரட் லீ (ஆஸி.,), தில்ஷன் (இலங்கை), ஜான்டி ரோட்ஸ் (தென் ஆப்ரிக்கா) உள்ளிட்ட வீரர்கள் இத்தொடரில் களமிறங்க உள்ளனர்.

மூலக்கதை