தோகையும் இல்ல... தொகையும் இல்ல...

தினமலர்  தினமலர்
தோகையும் இல்ல... தொகையும் இல்ல...

ஜார்ஜியா: ஜார்ஜியாவை சேர்ந்த ரெனா டேவிட் என்ற பெண், அழகிய மயில் ஒன்று தோகை விரித்து கேக் மீது அமர்ந்திருப்பது போலவும், மயில் தோகையின் மீதி, தரையில் கப் கேக்குகளாக படர்ந்திருப்பது போலவும் வேண்டுமென கூறி, ஒரு பேக்கரியில், 'ஆர்டர்' கொடுத்துள்ளார்.

இதற்காக, இந்திய மதிப்பில், 21 ஆயிரம் ரூபாய் பணமும் அளித்தார். திருமண நாளுக்காக, 'கேக்' ஆர்டர் செய்து ஆர்வத்தோடு காத்திருந்த மணமகள், தொழுநோய் வந்த வான்கோழி போல வினியோகிக்கப்பட்ட கேக்கை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆரம்பரத்தில் பணத்தை திரும்ப தர மறுத்த பேக்கரி உரிமையாளர், இந்த போட்டோ பேஸ்புக்கில் வைரலானதை தொடர்ந்து வேறு வழியின்றி பணத்தை திருப்பி கொடுத்தாராம்.

மூலக்கதை