சென்னை பல்கலைக்கழக தடகளம் ரோஷினி, ஹேமமாலினி புதிய சாதனை

தினகரன்  தினகரன்
சென்னை பல்கலைக்கழக தடகளம் ரோஷினி, ஹேமமாலினி புதிய சாதனை

சென்னை: சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 52வது சர்.ஏ.லட்சுமணசாமி முதலியார் நினைவு தடகள போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்தப் போட்டியில் 700 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1200 தடகள வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல்நாள் 800 மீட்டர் ஓட்டத்தில் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மாணவர் எம்.ரகுராம்  ஒரு நிமிடம் 51.16 விநாடிகளில் இலக்கை கடந்து  புதிய சாதனையை படைத்தார். எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி மாணவி  ஆர்.ஐஸ்வர்யா  மும்முறை தாண்டுதல் போட்டியில் 12.65 மீட்டர் தாண்டி பல்கலைக்கழக அளவில் புதிய சாதனையை நிகழ்த்தினார். சங்கிலிகுண்டு எறியும் போட்டியில் லயோலா கல்லூரி மாணவர் நிர்மல்ராஜ் 60.27 மீட்டர் தொலைவுக்கு எறிந்து புதிய சாதனை படைத்தார்.தொடர்ந்து 2வது நாளான நேற்றும் பல்கலைக்கழக அளவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.  எம்ஓபி வைஷ்ணவா  கல்லூரி மாணவி  ரோஷினி 400மீட்டர் தொலைவை 56.6 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.  ஈட்டி எறியும் போட்டியில் எஸ்டிஎன்பி வைஷ்ணவா கல்லூரி மாணவி  ஹேமமாலினி 47.41 மீட்டர் தொலைவுக்கு எறித்து புதிய சாதனையை நிகழ்த்தினார். எத்திராஜ் கல்லூரி மாணவி ஜெயந்தி 2005ம் ஆண்டு 44.12 மீட்டர் தொலைவுக்கு வீசியதே இதுவரை சாதனையாக இருந்தது.

மூலக்கதை