கமல் மீது குற்ற நடவடிக்கை கோரிய வழக்கு நவ.22க்கு பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
கமல் மீது குற்ற நடவடிக்கை கோரிய வழக்கு நவ.22க்கு பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான் என பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை டெல்லி  பாட்டியாலா நீதிமன்றம் நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.தமிழகத்தில் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ேபசிய மக்கள் நீதி மய்யம்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து’’ என்றார்.இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த நிலையில் கமல்ஹாசனின் மேற்கண்ட பேச்சுக்கு எதிராக அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்னு குப்தா என்பவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்  செய்தார்.இந்த வழக்கு, டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி சுமித் ஆனந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கு ஆதாரங்களை தாக்கல் செய்தார். இதையடுத்து 22ம் தேதிக்கு நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.

மூலக்கதை