பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

தினகரன்  தினகரன்
பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி: தாவூத் இப்ராகிம் கூட்டாளி இக்பால் மிர்ச்சி உடன் இணைந்து நில  முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தேசியவாத காங்கிரஸ்  கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல்  படேல் வரும்  18ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.முன்னாள்  மத்திய அமைச்சர் பிரபுல் படேலின் மில்லேனியம் டெவலப்பர்ஸ்  நிறுவனம் கடந்த 2007ல், மும்பை வொர்லி பகுதியில், சீஜே  ஹவுஸ் என்ற 15 மாடி வணிக வளாகத்தை கட்டியது. இதன் 3வது மற்றும் 4வது  தளங்கள், நிழல்  உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான இக்பால்  மிர்ச்சியின் மனைவி ஹஜ்ரா இக்பாலின் பெயருக்கு மாற்றப்பட்டது. இந்த  கட்டிடம் இக்பாலின் மனைவிக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாக  கூறப்பட்டது. இதனை விசாரித்த  அமலாக்கத்துறை பண மோசடி, போதை மருந்து  கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களின் கீழ் பெறப்பட்டதாக  குற்றம் சாட்டியது. ஆனால் பிரபுல் படேல் தரப்பு ஆரம்பம் முதல் இந்த  குற்றச்சாட்டை மறுத்து வந்தது.இந்நிலையில், இது தொடர்பாக  விளக்கமளிக்க பிரபுல் படேல் அமலாக்கத்துறையின் மும்பை அலுவலகத்தில் வரும்  18ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மூலக்கதை