ஆந்திர விவசாயிகளுக்கு 13,500 முதலீட்டு தொகை

தினகரன்  தினகரன்
ஆந்திர விவசாயிகளுக்கு 13,500 முதலீட்டு தொகை

திருமலை: ஆந்திராவின் சிம்மபுரியில் உள்ள  வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் விவசாயிகளுக்கு முதலீட்டு தொகையாக 13,500 வழங்கும் ரைத்து பரோசா திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி  வைத்து பேசியதாவது:2017ல் விவசாயிகள் படும் கஷ்டத்தைக் கண்டு அந்தாண்டு நடந்த கட்சி கூட்டத்திலேயே ரைத்து பரோசா திட்டத்தை கொண்டு வருவேன் என உறுதி அளித்தேன். நான் கொடுத்த வாக்குறுதியை காட்டிலும் தற்போது ஓராண்டு அதிகமாக 5  ஆண்டுகளுக்கு 13 ஆயிரத்து 500 வழங்கப்பட உள்ளது. அதன்படி மே மாதத்தில் 7500,  அக்டோபர் மாதத்தில் 4 ஆயிரம், சங்கராந்தி அன்று 2 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார்.

மூலக்கதை