டி.கே.சிவகுமாரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
டி.கே.சிவகுமாரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பெங்களூரு: பணப்பரிமாற்ற முறைகேடு புகாரில் கைதாகி டெல்லி திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் நீதிமன்ற காவலை  அமலாக்கத்துறை நீதிமன்றம் அக்டோபர் 25ம் தேதி வரை  நீட்டித்துள்ளது. முறைகேடாக  பண பரிவர்த்தனை செய்த புகார் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி  டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் விசாரணைக்கு ஆஜரானார். பின்னர்  அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவரை அக்டோபர் 15ம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவிட்டார். சிவகுமாரின் காவல் முடிந்ததை தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப் பட்டார். இதையடுத்து அவரது காவலை 25ம்  தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மூலக்கதை