போட்டோவுக்கு போஸ் தருவதை நிறுத்திவிட்டு மோடிஜி கொஞ்சம் வேலைய பாருங்க...: கபில்சிபல் விமர்சனம்

தினகரன்  தினகரன்
போட்டோவுக்கு போஸ் தருவதை நிறுத்திவிட்டு மோடிஜி கொஞ்சம் வேலைய பாருங்க...: கபில்சிபல் விமர்சனம்

புதுடெல்லி: ‘பிரதமர் நரேந்திரமோடி புகைப்படங்களுக்கு போஸ் தருவதை நிறுத்திவிட்டு நாட்டிற்கான பணியில் ஈடுபட வேண்டும்,’ என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி அளித்த பேட்டி ஒன்றில், ‘இந்தியாவின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது,’ என கூறினார். இதை சுட்டிக்காட்டி, மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:மோடி ஜி கொஞ்சம் கவனிக்கிறீர்களா? அபிஜித் பானர்ஜி: 1. இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது. 2. புள்ளி விவர தரவுகளில் அரசியல் குறுக்கீடு 3. சராசரி நகர்ப்புற மற்றும் கிராமப்புற நுகர்வு கீழே சென்றுவிட்டது. கடந்த 70ம் ஆண்டில் இதுபோன்றது நிகழ்ந்தது இல்லை. 4.இந்தியர்கள் நெருக்கடியில் இருக்கிறோம். மோடி ஜி... போட்டோக்களுக்கு போஸ் தருவதை குறைத்துக் கொண்டு, நாட்டுப் பணியில் தாங்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறியுள்ளார்.

மூலக்கதை