செப்டம்பரில் ஏற்றுமதி 6.57 சதவீதம் சரிவு

தினமலர்  தினமலர்
செப்டம்பரில் ஏற்றுமதி 6.57 சதவீதம் சரிவு

புது­டில்லி:நாட்­டின் ஏற்­று­மதி, கடந்த செப்­டம்­பர் மாதத்­தில், 6.57 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்து, 26 பில்­லி­யன் டால­ராக, அதா­வது, இந்­திய மதிப்­பில், 1.85 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது.


நாட்­டின் ஏற்­று­ம­தி­யில் முக்­கிய பங்கு வகிக்­கும் துறை­க­ளான பெட்­ரோ­லி­யம், பொறி­யி­யல், தோல், ரசா­ய­னம், நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் ஆகி­ய­வற்­றின் ஏற்­று­ம­தி­யில் சரிவு ஏற்­பட்­ட­தால், செப்­டம்­பர் மாத ஏற்­று­மதி குறைந்­துள்­ளது.ஏற்­று­மதி மட்­டு­மின்றி
இறக்­கு­ம­தி­யும், 13.85 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்து, 77 ஆயி­ரத்து, 106 கோடி ரூபா­யாக சரிந்­து உள்­ளது. இதை­ய­டுத்து, வர்த்­தக பற்­றாக்­குறை, 1.06 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது.


செப்­டம்­பர் மாதத்­தில், முக்­கி­ய­மான, 30 துறை­களில், 22 துறை­களில் ஏற்­று­மதி குறைந்­துஉள்­ளது.நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள், பொறி­யி­யல் பொருட்­கள், பெட்­ரோ­லி­யப் பொருட்­கள் ஆகி­யவை முறையே, 5.56 சத­வீ­தம், 6.2 சத­வீ­தம், 18.6சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
மதிப்­பீட்டு மாதத்­தில், கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி, 18.33 சத­வீ­தம் சரிந்­துள்­ளது. கச்சா
எண்­ணெய் அல்­லாத பொருட்­கள் இறக்­கு­மதி, 12.3 சத­வீ­தம் குறைந்­துள்­ளது.

நடப்பு நிதி­யாண்­டில், ஏப்­ரல் முதல், செப்­டம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில் ஏற்­று­மதி, 2.39 சத­வீ­த­மும், இறக்­கு­மதி, 7 சத­வீ­த­மும் சரிந்­துள்­ளது.தங்­கம் இறக்­கு­மதி, 50.82 சத­வீ­தம்
சரிந்­துள்­ளது.

சேவை­கள் துறை ஏற்றுமதி அதிகரிப்பு।

நாட்­டின் சேவை­கள் துறை ஏற்­று­மதி, 10.4 சத­வீ­தம் அள­வுக்கு ஆகஸ்ட் மாதத்­தில் அதி­க­ரித்­து உள்­ளது; இதன் மதிப்பு, 1.30 லட்­சம் கோடி ரூபாய் என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்­தில், 1.17 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. சேவை­கள் துறை இறக்­கு­ம­தியை பொருத்­த­வரை, ஆகஸ்ட் மாதத்­தில், 85 ஆயி­ரத்து, 200 கோடி ரூபா­யாக
உள்­ளது. இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட,16 சத­வீ­தம் அதி­க­மா­கும். நடப்பு
ஆண்­டின் ஜூலை மாதத்­தில், சேவை­கள் துறை இறக்­கு­மதி, 91 ஆயி­ரத்து, 93 கோடி ரூபா­யாக இருந்­தது.

மூலக்கதை