தமிழகத்தில் வணிக வரி வசூல் 6 மாதத்தில் ரூ.48 ஆயிரம் கோடி

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் வணிக வரி வசூல் 6 மாதத்தில் ரூ.48 ஆயிரம் கோடி

புதுடில்லி:தமிழகத்தில், நடப்பு நிதியாண்டில், ஆறு மாதங்களில், 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வணிக வரி வசூல் நடைபெற்றுள்ளது.

தமிழக அரசுக்கு, வணிக வரித்துறை வாயிலாக, ஆண்டுதோறும் கிடைக்கும் வரி வருவாய் அதிகரித்து வருகிறது. ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பின், இந்த வருவாய் மேலும் அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், வணிக வரியாக, 1 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில், 50 சதவீத வருவாய் ஈட்டப் பட்டுள்ளது.



இது குறித்து, வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாதந்தோறும், வணிக வரி வருவாய் அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், மாநில மற்றும் மத்திய, ஜி.எஸ்.டி., சேர்த்து, இதுவரை, 48 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.இதில், ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வராத, பெட்ரோலியம் மற்றும் மதுபான வகையில் மட்டும், 21 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.



மேலும், மத்திய அரசிடமிருந்து, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையின் கீழ், 5,200 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.இந்த ஆறு மாதங்களில், ஜூலையில் மட்டும், அதிக பட்சமாக, 10 ஆயிரம் கோடி ரூபாயும்; ஜூன் மாதத்தில், குறைந்தபட்சமாக, 6,850 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை