சர்வதேச அளவில் சூதாட்ட விவகாரத்தால் ‘டேமேஜ்’ ஆன இமேஜை சரிசெய்வேன்...பிசிசிஐ தலைவராகும் கங்குலி ஓபன்டாக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச அளவில் சூதாட்ட விவகாரத்தால் ‘டேமேஜ்’ ஆன இமேஜை சரிசெய்வேன்...பிசிசிஐ தலைவராகும் கங்குலி ஓபன்டாக்

மும்பை: உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் அடிப்படையில் பிசிசிஐ செயல்பட்டு வரும் 23ம் தேதிக்கு பின் (மூன்று ஆண்டுக்கு  பின்) தனித்து செயல்படவுள்ளது. அதற்காக, பிசிசிஐ அமைப்பில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

இந்த பொறுப்புக்கு இந்திய அணியின்  முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் பிரிஜேஷ் படேல் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் தற்போது பிசிசிஐ தலைவர் பொறுப்புக்கு  கங்குலி நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.

ஆனால், இந்த பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்ய முன்வராத காரணத்தால், பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வு செய்யப்படுவது  உறுதியாகியுள்ளது. ஆனால் முறையான அறிவிப்பு வரும் 23ம் தேதி தான் வெளியாகும்.
 
தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக 5  ஆண்டுக்கு மேல் கங்குலி பதவி வகிப்பதால், பிசிசிஐ தலைவராக புது விதிகளின்படி அவர் தலைவர் பொறுப்பில் வரும் ஜூலை 2020 வரை மட்டுமே  நீடிக்க முடியும்.

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கவுள்ளதை ராஜீப் சுக்லா உறுதி செய்துள்ளார். இதுகுறித்து கங்குலி கூறுகையில், ‘‘விதிமுறைகள் என்பது அனைவருக்கும் ஒன்றுதான்.

எஞ்சியுள்ள நாட்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் என்னால்  முடிந்ததை செய்வேன். ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்.

பிசிசிஐ ‘இமேஜ்’ சர்வதேச அளவில் மோசமாக (வீரர்களின் சூதாட்ட விவகாரம்) உள்ளது. அதை சரிசெய்ய எனக்கு கிடைத்த சரியான வாய்ப்பு இது.   எதிர்ப்புடன் பொறுப்பேற்றாலும் இல்லை போட்டியின்றி பொறுப்பேற்றாலும் சரி இது நிச்சயமாக மிகப்பெரிய பொறுப்பு.

ஏன் என்றால், சர்வதேச  அளவில் கிரிக்கெட்டின் மிகப்பெரிய நிர்வாகம் பிசிசிஐ தான்.

நான் பிசிசிஐ தலைவராவேன் என நினைத்துக்கூட பார்க்கவேயில்லை’’ என்றார்.

.

மூலக்கதை