மெக்சிகோவில் மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 14 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மெக்சிகோவில் மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 14 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு

மெக்சிகோ: மெக்சிகோவில் மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 14 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் மிசோகான் மாநிலத்தில் உள்ள அகுயிலா நகர் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிகம் உலவும் பகுதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போதைப்பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அகுயிலா நகர் பகுதியில் வழக்கம்போல் போலீசார் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த ரோந்து பணியில் 2 வாகனங்களில் 18 காவலர்கள் சென்றிருந்தனர். அப்போது அகுயிலா நகர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் மறைந்திருந்த மர்ம நபர்கள் காவல்துறை வாகனங்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போலீஸ் வாகனங்கள் தீப்பிடித்து வெடித்தன. இதில் இரு வாகனங்களிலும் இருந்த 14 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் 4 காவல்துறையினர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை