முக்கிய இடங்களில் வன்முறையில் ஈடுபட திட்டம் 22 தீவிரவாதிகள் பெங்களூருவில் ஊடுருவல்: மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
முக்கிய இடங்களில் வன்முறையில் ஈடுபட திட்டம் 22 தீவிரவாதிகள் பெங்களூருவில் ஊடுருவல்: மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

பெங்களூரு: 22 தீவிரவாதிகள் பெங்களூருவில் ஊடுருவியுள்ளனர் என்று மத்திய தீவிரவாத ஒழிப்பு படை கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய உளவுத்துறை கர்நாடக அரசுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடகாவில் உள்ள அணைகள், புனிதத்தலங்கள், சுற்றுலாத்தலங்கள், விதானசவுதா உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவும், பல்வேறு மதத் தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ், தலைவர்கள், முக்கிய  அரசியல் தலைவர்களை கொலை செய்யவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக பெங்களூருவில், சர்வதேச தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த சுமார் 20 முதல் 22 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர். எனவே, முக்கிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதுடன், தீவிரவாதிகளை கண்காணித்து  அவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் கர்நாடக அரசு ஈடுபட வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள இந்த தீவிரவாதிகள் நாட்டின் பாதுகாப்பை சீர் குலைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளனர்.  எனவே, மேற்கண்ட முக்கிய இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய உளவுத்துறை, கர்நாடக அரசுக்கு அனுப்பி உள்ள எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை