இந்தியர் அபிஜித் பானர்ஜி, மனைவிக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

தினமலர்  தினமலர்
இந்தியர் அபிஜித் பானர்ஜி, மனைவிக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம் : அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி 58 உட்பட மூன்று பேருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதார துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, உள்ளிட்ட பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி அவரது மனைவியும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருமான எஸ்தர் டப்லோ அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் மைக்கேல் கிரிமர் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்தப் பரிசு தங்கப் பதக்கம் 6.52 கோடி ரூபாய் ரொக்கமும் கொண்டது.

உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததால் இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண் என்ற பெருமையை எஸ்தர் டப்லோ பெற்றுள்ளார்.

மூலக்கதை