நடப்பாண்டு இறுதியில் நெடுஞ்சாலை 27,000 கி.மீட்டராக அதிகரிக்கும்: டிச. முதல் மின்னணு முறை கட்டணம்...நிதின் கட்கரி தகவல்

தினகரன்  தினகரன்
நடப்பாண்டு இறுதியில் நெடுஞ்சாலை 27,000 கி.மீட்டராக அதிகரிக்கும்: டிச. முதல் மின்னணு முறை கட்டணம்...நிதின் கட்கரி தகவல்

டெல்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில்  பங்கேற்று பேசிய அவர், 24 ஆயிரத்து 996 கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் இது 27 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கச் சாவடி கட்டணம் முழுமையாக மின்னணு முறைக்கு மாறிவிடும் என்று தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இதன் மூலம் சுங்கச் சாவடி கட்டண வசூலில் இருந்த பிரச்னைகள் முழுமையாக  நீங்கிவிடும் என்றார். மேலும். முழுமையான மின்னணு முறையால், அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி மூலம் கிடைக்கும் கட்டண வருவாய் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் மேலும் பல  தரமான சாலைகளை அமைக்க முடியும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மூலக்கதை