இலங்கையில் வெளிநாட்டு குழுக்கள் கண்காணிப்பு

தினமலர்  தினமலர்
இலங்கையில் வெளிநாட்டு குழுக்கள் கண்காணிப்பு

கொழும்பு: இலங்கையில், வரும், நவ., 16ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், 35 பேர் போட்டியிடுகின்றனர்; 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், ஓட்டளிக்க உள்ளனர். இந்நிலையில், தேர்தலை கண்காணிக்க, வெளிநாட்டு குழுக்கள், இலங்கைக்கு வரவேண்டும், என, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. இதையடுத்து, வெளிநாடுகளை சேர்ந்த நான்கு குழுக்கள், தேர்தலை கண்காணிக்க இலங்கைக்கு வந்துள்ளன.

மூலக்கதை