தொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
தொழிலதிபர்களின் ஒலி பெருக்கி மோடி:ராகுல் குற்றச்சாட்டு

சண்டிகார்: தொழிலதிபர்களின் ஒலிபெருக்கி போன்று செயல்படுகிறார் மோடி என காங். எம்.பி. ராகுல் குற்றம்சாட்டினார்.
அரியானா மாநில சட்டசபைக்கு வரும் 21-ம் தேதி நடக்கிறது. காங். எம்.பி.ராகுல், காங். வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.நூஹ் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியது, பிரதமர் மோடி தன்னை உண்மையான தேசியவாதி என கூறினால், பொதுத்துறை நிறுவனங்களை ஏன் விற்க வேண்டும். பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட வேண்டுமானால், ஏழைகளின் பாக்கெட்டில்தான் பணத்தை போட வேண்டும். ஆனால் ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அதை தனது பணக்கார நண்பர்களின் பாக்கெட்டில் போடுகிறார். அவருக்கு 15 பணக்கார நண்பர்கள் உள்ளனர்.


அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக திகழ்பவர் பிரதமர் மோடி. அவரை எப்போதும் டிரம்ப், அம்பானி போன்றவர்களுடன்தான் பார்க்க முடியும். விவசாயிகளுடன் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை