ஹாங்காங்க் போராட்டம்: சீன அதிபர் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
ஹாங்காங்க் போராட்டம்: சீன அதிபர் எச்சரிக்கை

பீஜிங்: சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 'சீனாவைத் துண்டாட நினைக்கும் எந்த அந்நிய சக்தியும், சீன மக்களுக்கு எதிரானதுதான். சீனாவில் உள்ள எந்த பகுதியையைும், யார் துண்டாட நினைத்தாலும், அவர்கள் அழிக்கப்படுவார்கள்; அவர்களின் உடல்கள் சுக்குநூறாக்கப்படும்; எலும்புகள் மண்ணோடு மண்ணாக போகும்' என, அதிபர் ஸீ ஜின்பிங் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜின்பிங் எந்த ஒரு பிராந்தியத்தையும் குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும், ஹாங்காங்கில் தொடர்ச்சியாக நடந்து வரும் போராட்டங்களை மனதில் கொண்டே, இவ்வாறு எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை