இது தேவையா மிட்சல் மார்ஷ் | அக்டோபர் 14, 2019

தினமலர்  தினமலர்
இது தேவையா மிட்சல் மார்ஷ் | அக்டோபர் 14, 2019

 மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணி ‘ஆல் ரவுண்டர்’ மிட்சல் மார்ஷ் 27. முதல் தர ஷெபீல்டு தொடரில் மேற்கு ஆஸ்திரேலிய அணி கேப்டனாக உள்ளார். டாஸ்மானிய அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் 53 ரன் எடுத்த போது பேர்டு பந்துவீச்சில் அவரிடமே சிக்கினார்.

இந்த விரக்தியில் ‘டிரசிங் ரூம்’ சென்ற மிட்சல் மார்ஷ் சுவற்றில் ஓங்கி குத்தினார். ‘நிலத்தை அடித்தவனும், கோபத்தை  குணமாக கொண்டவனும் வேதனையில் தப்ப முடியாது, என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப, மிட்சல் மார்ஷ் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் பவுலிங் செய்ய முடியாத நிலை வந்துள்ளது. வரும் நவ. 21ல் பிரிஸ்பேனில் துவங்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை